Saturday, October 3, 2015

82. தனுஷை செக்ஸ் பட நடிகர் என்று சொன்ன தயாரிப்பாளர்?

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா
ஒரு நாள் திடீர் என்று என்னை அழைத்தார் எஸ்.கே.கிருஷ்ணகாந்த்.

அவரை நேரில் சென்று சந்தித்த போது கையில் ஏதும் பணம் இருக்கிறதா? என்று கேட்டார்.

படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது. இன்னைக்கு பேட்டா கொடுக்க பணம் வேண்டும். தருகிறேன் என்று சொன்னவர் போன் எடுக்கவில்லை. ஒரு சின்ன தொகை இருந்தால் கூட கொடுங்கள் என்று சொன்னார். உங்களிடம் இல்லை என்றால், உங்களுக்கு நெருக்கமான தயாரிப்பாளர், பைனான்சியரிடம் பெற்று தாருங்கள் என்றார்.

திருடா திருடி - தனுஷ், சாயாசிங் 
பிறகு, அவர் தயாரித்துக் கொண்டிருந்த புதிய படத்தின் பாடல்களை வாக்மேனில் கேட்க வைத்தார்.

பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

இந்தப் படத்தோட செங்கல்பட்டு உரிமையை வைத்துக் கொண்டு யாரிடமாவது பணம் வாங்கி தர முடியுமா? என்று கேட்டார்.

நான் விசாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, படத்தில் நடிக்கும் நடிகர்கள் விபரங்களை குறித்துக் கொண்டு புறப்பட்டேன்.

ஒளிப்பதிவாளர் ரமேஷ்.ஜி 
எனக்கு தெரிந்த தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, ஒரு மீடியேட்டர் ஒருவர் ஒரு தொகையை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்.

கே.பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் படத்தை செங்கல்பட்டு ஏரியாவுக்கு சிப்டிங் முறையில் வெளியிட்டதில் தனக்கு கிடைத்த வருமானம் அது என்று, அந்த தொகைக்கான காரணம் பற்றி என்னிடம் தெரிவித்தார்.

படம் தயாரிப்பது மட்டுமல்லாமல் விநியோகமும் செய்வது நல்ல விஷயம்தான் என்று அவரிடம் கூறிய போது, உங்களுக்கு தெரிந்து, சின்ன தொகையில் இந்த மாதிரி படங்கள் வந்தால் சொல்லுங்கள் வாங்கி வெளியிடலாம் என்று தெரிவித்தார்.

இசையமைப்பாளர் தினா 
உடனே, எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தயாரிக்கும் படம் பற்றியும், அந்தப் படத்தின் செங்கல்பட்டு உரிமையை வைத்துக் கொண்டு பதினைந்து லட்சம் கொடுங்கள். முதலில் ஒரு சின்ன தொகையை கொடுத்து ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுங்கள். மீதி பணத்தை படம் வெளியாகும் போது கொடுங்கள். இல்லை என்றால், அந்த ஏரியா பெயரில் பைனான்ஸ் மாதிரி கொடுங்கள் என்று அவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன்.

அந்த பையன் முதல்ல நடிச்ச படம் செக்ஸ் படம். அதனால ஓடிச்சு. அவன வச்சு படம் எடுத்து பிசினஸ் பண்ண முடியாது. நம்ம பணம் போய் லக்காயிடும் என்று கூறினார்.

பாடலாசிரியர் யுகபாரதி
அந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன். பிரமாதமாக வந்திருக்கிறது. நான் வேண்டுமானால் அந்தப் பாடல்களை கேட்க உங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன். பாடல்களை கேட்ட பிறகு உங்கள் முடிவை சொல்லுங்கள். என்று விண்ணப்பமும் வைத்தேன்.

அவர் அதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.  அப்போது அவர் தயாரித்துக் கொண்டிருந்த படம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். அவர் ஒதுங்கும் போது அதற்கு மேல் அவரிடம் வலியுறுத்தி பேசி பயனில்லை 

விக்ரம் நடித்த கிங் படத்திற்கு பிறகு எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தயாரித்த அந்தப் படம் பெயர், 'திருடா திருடி'. சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, சாயாசிங் கதாநாயகியாக நடித்திருந்தார். கிங் படத்திற்கு பிறகு தினா இசையமைத்திருந்தார். ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்தார்.

பாடகி மாலதி 
அந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழை மறறவர்கள் பயன்படுத்தும் படி உருவாக்கி இருந்தார் எஸ்.கே.கிருஷ்ணகாந்த்.

ஏவி.எம்.ஸ்டுடியோவில் பாடல் காட்சிகளை திரையிட்டு காட்டிய போது, கூட்டம் அலை மோதியது. பல முறை பாடல் காட்சி திரையிடப்பட்டது.

பாடல் வெளியீட்டு விழா, 'படம் ஹிட்' என்கிற எண்ணத்தை உருவாக்கியது.

படம் வெளியான பிறகு, தினா இசையில் யுகபாரதி எழுத்தில், மாலதி, சங்கர் மகாதேவன் பாடிய ''மன்மதராசா'' பாடல், பட்டி தொட்டி எங்கும் புகழ் பாடியது. 
பாடகர் சங்கர் மகாதேவன் 

சிவசங்கர் நடன அமைப்பும், அதில் ஆடிய தனுஷ், சாயாசிங் நடனமும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் கவர்ந்தது.

‘‘கொத்தரங்கா மாதிரி இருந்துகிட்டு என்னம்மா ஆடுறான் பாரு’’ என்று தனுஷ் நடனத்தை வியந்து பலர் பேசினார்.

பாடல் மட்டுமல்லாமல் படமும் ஹிட் ஆனது.

செங்கல்பட்டு ஏரியா வியாபரம், ஏலம் விடும் அளவுக்கு உயர்ந்தது. 2003 ஆண்டில் ஒன்றரை கோடிக்கு செங்கல்பட்டு ஏரியாவுக்கு ஏலத்தில் அந்தப் பட உரிமை விற்பனை ஆனதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன.

நடன இயக்குநர் சிவசங்கர்
அந்த செய்தியை படித்த எனது அந்த தயாரிப்பாளர், நீங்க சொன்ன போது அந்தப் படத்தை நான் வாங்கி இருந்தால், இப்போது ஒன்றரை கோடி பார்த்திருக்கலாம் என்று ஆதங்கப்பட்டார்.

காலம் உருண்டோடியது.

மன்மதராசா பாட்டை காட்டி புகழின் உச்சிக்கு சென்ற கிருஷ்ணகாந்த், மன்மதன் என்று படம் எடுத்து கஷ்டப்பட வைத்து காலம்?. 


No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...