எஸ்.எஸ்.துரைராஜ் |
மம்மூட்டி, முகேஷ் நடிப்பில் மலையாளத்தில்
வெளியான ‘மகாயானம்’ படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவான இந்தப் படத்திற்கு லோகிததாஸ்
கதை எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினர் கே.எஸ்.ரவிக்குமார்.
தயாரிப்பாளர் மீது பாசம் கொண்டவர்
கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு படம்
இயக்குபவர். அதனால், அவருக்கு தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று பெயர் உண்டு.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர்
எஸ்.எஸ்.துரைராஜ் பெயரை படத்தின் கதாநாயகர் சரத்குமாரின் கதாபத்திரத்திற்கு,
துரைராஜ் என்று சூட்டினார். லாரி டிரைவர் துரைராஜ் ஆக சரத்குமார் நடித்த இந்தப்
படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் மீனாவின் கணவர் பாத்திரத்தில் ஜெயராம்
நடித்தார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் |
மீனா, ரம்யாகிருஷ்ணன், வடிவுக்கரசி,
வினுசக்கரவர்த்தி, ரமேஷ்கண்ணா, சிட்டிபாபு, கே.விஜயன், மன்சூர் அலிகான், கிரேன் மனோகர், அஜய்ரத்னம், சபீதா ஆனந்த் உட்பட பலர்
நடித்த இந்தப் படத்தில் ஆனந்த், கமலேஷ்குமார் இருவரும்
அறிமுகமானார்கள். ஒரு காட்சியில் நானும், இளங்கோ லேப் பிலிம் வேல்டு இளங்கோ
அவர்களும் மேஸ்திரியாக நடித்தோம்.
கமலேஷ்குமார்,
சுரேஷ்காந்த் இருவரும் திரைக்கதையில் உதவ, எச்.ஆர்.கிருஷ்ணமோகன், எஸ்.தங்கவேலு இணை
இயக்கத்தில், வி.தமிழரசன், செந்தில்நாதன், ஸ்ரீதரன், திருமுருகன் ஆகியோர் உதவி
இயக்குனர்களாக பணிபுரிய, படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையம் சுற்றியுள்ள கிராமங்களில்
நடைபெற்றது.
மோகன் – ராஜேந்திரன் கலை அமைப்பில்,
புதியவர் எஸ்.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், கே.தணிகாசலம் படத்தொகுப்பு செய்ய, பீட்டர்
ஹெய்ன் சண்டைப் பயிற்சி அளித்தார்.
பாறை படத்தில் சரத்குமார், ரம்யாளிருஷ்ணன் |
எஸ்.தனலிங்கம், கே.அண்ணாத்துரை இருவரும்
அலுவலக நிர்வாகத்தை கவனிக்க, கே.வி.சுப்பிரமணி தயாரிப்பு மேற்பார்வையில்,
மாரியப்பன், பாண்டியன் ஆகியோரின் தயாரிப்பு நிர்வாகத்தில், ஏ.கோதண்டம் ஒப்பனையில்,
மூர்த்தி ஆடை வடிவமைப்பில் துவங்கிய இந்தப் படத்திற்கு நானும், நெல்லை
சுந்தராஜனும் மக்கள் தொடர்பாளராக வேலை செய்தோம். எல்.மூர்த்தி புகைப்பட
கலைஞராகவும், மேக்ஸ் டிசைனராக பணியாற்றினார்கள்.
சபேஷ் முரளி இசையமைப்பில் கவிஞர் காளிதாஸ்,
பா.விஜய், விக்டர் தாஸ் ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். ‘ஏரோப்பிளேன் பறக்குது’
பாடலை உதித் நாராயணன் பாட, அசோக்ராஜா நடனம் அமைத்தார். ‘நான் ஒரு கனா கண்டேன்’
பாடலை ஹரிஸ் ராகவேந்திரா, சுஜாதா மோகன் இருவரும் பட, டி.கே.எஸ்.பாபு நடனம்
அமைத்தார். ‘கண்ணுக்குள் டிக்டிக்டிக்’ பாடலை கார்த்திக்ராஜா, பாப் ஷாலினி பாட,
ராஜூ சுந்தரம் நடனம் அமைத்தார். ‘நண்பனே நண்பனே’ பாடலை மனோ பாட, தருண் ராஜ் நடனம்
அமைத்தார். ‘விநாயகா விநாயகா’ பாடலை அனுராதா ஸ்ரீராம் பாட ரவிதேவ் நடனம்
அமைத்தார். ‘என் தாய் பாடலை கிருஷ்ணராஜ் பாடி இருந்தார்.
இந்தப் படத்திற்காக
கக்காநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சில லட்சம் செலவில் ஒரு வீடு கட்டி
அங்கு மீனா வசித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த வீட்டை இடித்தும் காட்சிகள் எடுக்கப்பட்டது.
மாஸ் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில்
எஸ்.எஸ்.துரைராஜ் தயாரித்த ‘பாறை’ படம் 2003 ஆம் ஆண்டு, ஜூன் 13 ஆம் தேதி வெளியானது.
கே.எஸ்.ரவிக்குமார்
படம் என்றாலே பாசம், நேசம், ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சக படமாக இருக்கும். இந்தப் படம்
அதிக செண்டிமெட் கலந்த படமாக வெளியானது.
No comments:
Post a Comment