ஆளுக்கொரு ஆசை - சத்யராஜ், மீனா |
திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் கே.பார்த்திபன், எஸ்.தமிழ்செல்வி இருவரும்
இணைந்து தயாரித்த படம் ‘ஆளுக்கொரு ஆசை’. வி.சேகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய
இந்தப் படத்தில் அறிவழகன் என்கிற வேடத்தில் ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் நடித்திருந்தார்.
ஈஸ்வரி என்கிற பாத்திரத்தில் மீனா நடிக்க, இவர்களுடன் மந்த்ரா, செந்தில்,
வடிவேலு, வடிவுக்கரசி, கல்பனா, டெல்லி கணேஷ், ஜோக்கர் துளசி, சிந்து, மின்னல் தீபா,
மாஸ்டர் மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு பி.எஸ்.செல்வம் – ஆர்.மகேந்திரன் இருவரும் ஒளிப்பதிவு
செய்ய, கே.ஏ.பாலன் கலை இயக்குனராக பணிபுரிந்தார். ஏ.பி.மணிவண்ணன் படத்தொகுப்பு செய்ய,
ஒப்பனை - சேத்தூர் தவகுரு, சிகை அலங்காரம் - போடி சரவணன், உடையலங்காரம் - கணேசன், புகைப்படம்
- எல்.மூர்த்தி, திரைக்கதை ஒத்துழைப்பு – தமிழன், முரளி, வசன உதவி – கலைச்செல்வன்,
இணை இயக்கம் – கே.வைரமணி, துணை இயக்கம் - கே.ஆர்.ராஜா, கே.தனசேகர், உதவி இயக்குனர்கள்
– முருகன், மூவேந்தர், கிருபாகரன், தயாரிப்பு நிர்வாக ஆலோசாகர் - நாராயணன், தயாரிப்பு
மேற்பார்வை - வி.எம்.பாபுஜி, தயாரிப்பு நிர்வாகம் - என்.சேகர், கார்த்திக், மக்கள்
தொடர்பு – நெல்லை சுந்தர்ராஜன், ஜி.பாலன் என பெரிய படக்குழு பணிபுரிந்தது.
‘இசை வசந்தம்’ எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ரவிபாரதி, பழனிபாரதி, பா.விஜய்,
கபிலன், நந்தலாலா ஆகியோர் பாடல்கள் எழுதி இருந்தனர். ‘பேல் பூரி’ என்கிற பாடலை கல்பனா,
‘இடுப்போடு சுங்குடி’ பாடலை திப்பு, அனுராதா ஸ்ரீராம், ‘காதல் காதல்’ பாடலை ஸ்ரீலேகா
பார்த்தசாரதி, கல்பனா, ‘கந்தன் என்றால் அறிவு’ பாடலை கார்த்திக், ‘கோட்டைக்கு நீ ராஜா’
பாடலை எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் பாடி இருந்தனர். பாடல்களை ஹிட் மியூசிக் நிறுவனம் வெளியிட்டது.
சிவசங்கர், லலிதாமணி, கலா, அசோக்ராஜா ஆகியோர் நடனம் அமைக்க, சண்டைக் காட்சிகளை
ஜாகுவார் தங்கம் அமைத்தார்.
ஏ.வி.எம். ஸ்டுடியோ, அருணாச்சலம் ஸ்டுடியோ, செல்வம் ஹவுஸ், ஊட்டி ஆகிய
இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஊட்டியில் ‘தெனாலி’ ஹவுஸில் படப்பிடிப்பு நடைபெற்ற போது நானும், ‘தினகரன்’
தேவராஜும் செய்தி சேகரிக்க சென்றிருந்தோம்.
ஒரு அறையில் வாழ்க்கைப் பிரச்சனை குறித்து சத்யராஜும் மந்த்ராவும் பேசிக்
கொண்டிருக்க, அங்கு வந்த மீனா அவர்களை கண்டு அதிர்ச்சி அடைவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்
இயக்குநர் வி.சேகர்.
கலகலப்பான குடும்ப படாமாக உருவான இந்தப் படம் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வந்தது.
ஆளுக்கொரு ஆசை - சத்யராஜ், மீனா, மந்த்ரா |
No comments:
Post a Comment