ஜி.பாலன் |
திருவள்ளுவர்
கலைக்கூடம் சார்பில் கே.பார்த்திபன் தயாரித்த படம், ‘நம்ம வீட்டு கல்யாணம்’. இந்தப்
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, மக்கள் இயக்குநர் வி.சேகர் இயக்கினார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக
ரவி என்கிற கதாபாத்திரத்தில் முரளி நடிக்க, கதாநாயகியாக மீனா என்கிற கதாபாத்திரத்தில்
மீனா நடித்தார். செங்கல்வராயன் என்கிற பாத்திரத்தில் வடிவேலு நடிக்க, கோபி என்கிற பாத்திரத்தில்
விவேக் நடித்தார். வடிவேலுவுக்கு ஜோடியாக சோனியா, விவேக் ஜோடியாக விந்தியா நடிக்க,
மேலும், மனோரமா, லிவிங்ஸ்டன், ராஜீவ், சிந்து, அம்மு, பிரமிட் நடராஜன், ஆர்.சுந்தராஜன்,
குமரிமுத்து, அனுமோகன், பாண்டு, அஜய்ரத்தினம், மதன்பாப் உட்பட பலர் நடித்தனர்.
இந்தப் படத்திற்கு
கவிஞர் அறிவுமதி, பழனிபாரதி, பா.விஜய், தாமரை, கலைக்குமார் ஆகியோர் பாடல்கள் எழுத,
இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்தார். ‘மின்னுது மின்னுது’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,
சித்ரா இருவரும் பாட, ‘என்னடி...’ பாடலையும், ‘நாட்டு சக்கர’ பாடலையும் மனோ பாடி இருந்தார்.
‘ஒதடு ஒதடு’ பாடலை கார்த்திக் பாட, ‘வானம் விட்டு’ பாடலை ஸ்ரீநிவாஸ், சுவர்ணலதா இருவரும்
இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடல்களுக்கு
லலிதா மணி, சிவசநகர் நடனம் அமைத்திர்ந்தனர்.
இயக்குனர் வி.சேகர் எம்.ஏ. |
பி.எஸ்.செல்வம், ஆர்.மகேந்திரன்
இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை ஜாகுவார் தங்கம் கவனித்தார்.
கே.ஏ.பாலன் கலை இயக்குனராகவும், ஏ.பி.மணிவண்ணன் எடிட்டராகவும் பணியாற்ற, கே.தனசேகர்,
கலைச்செல்வன், கே.ஜீவா மூவரும் திரைக்கதை மற்றும் வாசன உதவியாளர்களாகவும், கே.ஆர்.ராஜா,
கே.வைரமணி இணை இயக்குனர்களாகவும், தமிழன், முருகன் ஆகியோர் உதவி இயக்குனர்களாகவும்
பணியாற்றினார்கள்.
அலுவலக மக்கள் தொடர்பாளராக
நானும், மக்கள் தொடர்பாளராக நெல்லை சுந்தரராஜனும், டிசைனராகவும் மேக்ஸ் பணியாற்ற, ஏப்ரல்
மாதம் படப்பிடிப்பு துவங்கியது.
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில்
பல காட்சிகளையும், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், விஜிபி போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு
நடைபெற்றது. ‘‘அந்த வானம் விட்டு வந்த.... ஒரு வானவில்லும் நீ தானே...’’ பாடலை கொடைக்கானலில்
படமாக்கினார்கள்.
நம்ம வீட்டு கல்யாணம் - மீனா, வடிவேலு, விந்தியா, விவேக், முரளி |
கொடைக்கானலில் பாடல்
காட்சியில் முதல் நாள் நடித்த கதாநாயகன் முரளி, மறுநாள் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு
சென்றுவிட்டார். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வருவார் என்று காத்திருந்த படக்குழு,
அவர் வரமாட்டார் என தெரிந்த பிறகு, மீனா மற்றும் நடனக்குழுவினர் ஆடிய காட்சிகளை மட்டும்
எடுத்துக் கொண்டு சென்னை திரும்பியது.
தனது தவறுக்கு முரளி
வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு இயக்குனர் வி.சேகர் ஒரு கடிதம் எழுதினர். அந்த கடிதத்தை
படித்து ஆடிப்போன முரளி, பிறகு ஒரு நாள் தேதி கொடுக்க, அந்த காட்சிகளை செங்கல்பட்டு
அருகே உள்ள மலைகளில் படமாக்கி முடித்தார், இயக்குனர் வி.சேகர்.
2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 27 ஆம் தேதி வெளியானது,
நம்ம வீட்டு கல்யாணம்.
இந்தப் படம், சத்யராஜ்
நடித்த மாறன், புதுமுகங்கள் நடித்த ஆஹா எத்தனை அழகு ஆகிய இரு படங்களையும் எனக்கு பெற்று
தந்தது. அந்த அனுபவங்களை அடுத்தக் கட்டுரையில் சொல்கிறேன்.
No comments:
Post a Comment