ஜி.பாலன் |
இங்கு வெற்றிலைப்
பாக்கு வைத்து நம்மை வரவேற்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். நாம்தான் அடிக்கடி
சென்று இயக்குநர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க வேண்டும். அவரிடம் ஐந்து
உதவியாளர்கள் இருப்பார்கள். நம்மைப் போல, பல மாதங்கள், பல வருடங்கள் வாய்ப்பு
கேட்டு சென்று வரிசையில் நிற்பவர்கள் ஏராளமானோர் இருப்பார்கள். நாம், விடா முயற்சியோடும், நம்பிக்கையோடும்
சென்றால்தான் இங்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லா இயக்குநர் அலுவலகத்திலும்
அப்பாடித்தன் வரவேற்பு இருக்கும் என்பதை அறிவுறுத்தினார் அனுபவம் உள்ள ஒரு நண்பர்.
அப்படி என்றால், கதை மட்டும் இருந்தால்
இங்கு கதைக்காகாது. தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும், செவவிற்கும் பணம் தேவை.
அதை உருவாக்கிக் கொண்டுதான் வாய்ப்பு தேட முடியும் என்பதை அப்போது உணர்ந்தேன்.
அதனால், முதலில் வேலை தேட வேண்டும் என்று நடையை கட்டினேன்.
பகல் முழுவதும் பல
இடங்களுக்கு சென்று வேலை கேட்டேன். சொல்லிவிட தெரிந்த மனிதர் இல்லை. மறுநாள் வேலை
தேடும் முயற்சியை செய் என்று இரவு வந்தது. இரவும் இனிமையாக அமையவில்லை. படுக்க
வசதியாக கோவில், சத்திரம் எதுவும் என் கண்ணுக்கு தென்படவில்லை. அதனால், பேப்பர் வாங்கி
விரித்து பிளைட்பாரத்தில் படுக்கையை போட்டேன்.
திடீர் என எங்கிருந்தோ
வந்த மழை, என்னை நனைத்தது. எழுந்து ஒரு கடையின் ஓரமாக
ஒதுங்கினேன். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மழை
விட்டது.
ஆனால், இரண்டு மணிக்கு வந்த போலீஸ் என்னை விடவில்லை. கடையின்
பூட்டை இழுத்துப் பார்த்ததாக கேசு போட சேத்துப்பட்டு ஸ்டேஷனுக்கு ஜீப்பில் அழைத்து
சென்றனர்.
No comments:
Post a Comment